பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014

மறுபிறவி எடுத்த ஷீமேக்கர்: மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் 
பார்முலா-1 முன்னாள் சாம்பியனான மைக்கேல் ஷீமேக்கர் கோமா நிலையில் இருந்து குணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள மெரிபெல் நகரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது, அங்குள்ள பாறை மீது அவரது தலை மோதி பலத்த காயமடைந்தார்.
விபத்துக்குள்ளானபோது ஷீமேக்கர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
கவலைக்கிடமாக நிலையில் இருந்த அவர் தற்போது கோமா நிலையில் இருந்து மீண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளரான சேபைன் கேம் தெரிவித்துள்ளார்.
மேலும் நோய்வாய்ப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரின் நலனுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் ஷூ மார்க்கரின் குடும்பத்தவர்கள் நன்றிகளை வெளியிட்டுள்ளனர்.