பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014


இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை வரலாம். சஜித் எச்சரிக்கை
சர்வதேச விசாரணையானது, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக மிக விரைவில் பொருளாதார தடையை கொண்டுவர வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த பொருளாதார தடையானது, இலங்கையில் இருந்து ஏற்றுமதியை தடை செய்து பொருளாதாரத்தை நலிவடையச் செய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில் இவற்றுக்கான அனைத்துப் பொறுப்பையும் இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை 13வது சரத்தை அமுல் செய்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.