பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014


68 கோடி ரூபா போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் புலிகளின் முக்கிய உறுப்பினர் - பொலிஸார்
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 68 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய சந்தேக நபரான செல்லத்துரை சுரேந்திரராஜ் என்பவர் தலைமறைவாகி இருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் போர் நடைபெற்ற காலத்தில் கொழும்புக்கு தற்கொலை குண்டுத்தாரிகளை அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு கொழும்பில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொடுப்பது, தாக்குதல் நடத்தும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது என்பன இந்த சந்தேக நபரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பல வருடங்களாக இந்த நபரை தேடி வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.