பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014


வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே எம்மை தாக்கினர்: தர்கா நகர் வாசிகள்
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தர்கா நகர் வாசிகள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அந்நகரை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 15 ஆம் திகதி இரவு வெளியிடங்களில் இருந்த வந்தவர்கள் நகரில் குழப்பம் விளைவிக்கும்படியாக நடந்து கொண்டனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல்கள் இடம்பெற்ற பல இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு கிடைக்கும் முன்னர் தாக்குதல் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மோதலில் ஈடுபட்டவர்கள் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கடைகளுக்கு தீயிட்டனர். குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகினர். மேலும் 80 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறும் முன்னர், பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு பிரதேசத்தில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. கூட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத ரீதியான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.