பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

பொதுபலசேனாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க- நீதவான் உத்தரவு 
 கொழும்பில் இடம்பெற்ற ஜாதிகபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் பொதுபல சேனாவைச்சேர்ந்த உறுப்பினர்கள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாக கூறப்படும்
சம்பவம் தொடர்பில் ஜூலை 7 ஆம் திகதி குற்றச்சாட்டுகளை முன் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வைத்து 'நாயே' என்று தன்னை அவமதித்ததாக வட்டரக்க விஜித்த தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைதிரி குணரத்ன நீதவானின் கவனத்திற்கு இன்று கொண்டுவந்தhர்.
 
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நீதவான் சட்டத்தரணிக்கு பணித்துள்ளார்.