பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

ஆப்கானில் வெள்ளப் பெருக்கு - 100 பேர் உயிரிழப்பு 
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கி 100 பேர்  வரை பலியாகி உள்ளனர். 
 
ஆப்கானிஸ்தானில் வடக்கு பகுதியான பக்லானில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 
 
கடும் நிலச்சரிவு காரணமாக பல கிராமங்கள் அழிந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 70 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் பலரை காணவில்லை. 
 
100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி இடம்பெறுகிறது.