பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2014

கூட்டத்தில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
தொடர்சியாக ஒரு மணி நேரம் கூட்டத்தில் உரையாற்றிய மாவை எம்.பி மயங்கி சரிந்து வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையாக அனைத்துலக சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு சமகால பார்வையென்ற தலைப்பில் மட்டக்களப்பு கல்லடியில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.