பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014


அளுத்கம சம்பவங்கள்: கிழக்கு மாகாண சபையில் அமளி-அமர்வுகள் அடுத்த மாதத்திற்கு ஒத்திவைப்பு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் விசேட உரையாற்ற அனுமதி கோரப்பட்டதால்,கிழக்கு மாகாண சபையின் கூட்டம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து சபைத் தலைவர் சபையின் கூட்டத்தை எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சபையின் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, விவசாய அமைச்சர் ஹசீர் அஹமட் அளுத்கம சம்பவம் தொடர்பில் விசேட உரையொன்றை ஆற்ற அனுமதி கோரினார். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து சபையின் அமர்வுகள் 15 நிமிடங்கயளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடிய போது அவர் அதே கோரிக்கையை மீண்டும் முன்வைத்தார்.
சபைத் தலைவர் இரண்டாவது முறையாகவும் சபையை ஒத்திவைத்து 12.30 அளவில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த போது மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு தலைவர் மறுப்பு தெரிவித்தையடுத்து சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதன் காரணமாக தலைவர் சபையின் அமர்வை எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.