பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014



இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம்களின் சொத்துக்களை தொடர்ந்து சேதப்படுத்தியும், வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் நடத்தியும் வருகின்றது. வன்முறையில் ஈடுபட்டு வரும் பொதுபலசேனாவை தடைசெய்து இலங்கையில் அமைதி நிலவச் செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.