பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2014

இந்தியாவுடன் சமரசத்திற்கு தயார் - சீனா அறிவிப்பு 
news
 பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு முடிவு செய்த நிலையில் நேற்றைய தினம்  அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ டில்லி சென்றிருந்தார்.
 
இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
 
 
இச்சந்திப்பில் சீனா தனது வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவுக்கும் இந்தியா தனது  வெளியுறவுக்கொள்கையில் சீனாவுக்கும் முன்னுரிமை கொடுக்கும் எனவும் எல்லைப்பிரச்னையை தீர்க்க சீனா தயாராக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.
 
மேலும் இதற்காக இந்தியாவின் திட்டத்தை பெற நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் சீனாவில் உள்ள 2.6 பில்லியன் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.