பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2014


கருப்பு பண விவகாரம் தொடர்பாக சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை: அருண் ஜெட்லி
கருப்பு பண விவகாரம் தொடர்பாக நாங்கள் சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை என்று மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசு தயாரித்துள்ளதாகவும், அது இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரி அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசினார். 
அப்போது அருண் ஜெட்லி கூறுகையில், கருப்பு பண விவகாரம் தொடர்பாக நாங்கள் சுவிஸ் அரசிடம் இருந்து எந்த தகவலையும் பெறவில்லை. இதுவரையில் சுவிஸ் அரசுடன் எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம் என்று கூறினார்.