பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2014


சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கியோர் விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்: டி.ராஜா
சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கியோர் விவரங்களை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
பிரதமராக பொறுப்பேற்ற உடனேயே, சிறப்புப் புலனாய்வுக்குழுவை நரேந்திர மோடி ஏற்படுத்தினார். புலனாய்வுக்குழுவுக்கு கருப்புப் பண விவரங்கள் அனைத்தும் கிடைத்தவுடன், அதனை நாடாளுமன்றத்திலும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை கண்டுபிடித்து அதனை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.