பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

லங்கையில் ஒன்றுகூடலுக்கு தடை 
news
இலங்கையில் ஒன்று கூடலுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மயினா கியா இதனைத் தெரிவித்துள்ளார்.


சிறுபான்மை சமூகத்தினர் அமைதியாக போராட்டங்களையும் ஒன்று கூடுதலையும் மேற்கொள்ள இலங்கையில் தடைகள் காணப்படுகின்றன.

இது தொடர்பான அதிக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றன என்ற அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் உரிமை குறித்து சர்வதேச சட்டங்கள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

மேலும் இந்த நிலையில் அவற்றை இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார