பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014

புலி உறுப்பினர் வீரமணி கைது 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் வன்னி ஜயந்தன் முகாமில் உறுப்பினராக இருந்த வீரமணி என்றழைக்கப்படும் கண்ணமுத்து யோகராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

 
மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியை சேர்ந்த இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
சந்தேகநபரிடமிருந்து இருந்து கைக்குண்டு ஒன்றும், கட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்ற உத்தரவை பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டனர்.
 
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநகபர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.