பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


சென்னை மெரீனா கடற்கரையை 8ஆம் தேதி 8,000 பேர் சுத்தப்படுத்துகிறார்கள்
சென்னை கடற்கரை பகுதியை வரும் 8ஆம் தேதி சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.


மெரினா கடற்கரையில் இருந்து அக்கரை என்ற இடம் வரை 20 கி.மீ. தூரம் வரை இந்த பணி நடைபெறுகிறது. 8 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். 
இந்த பணியின்போது 50 டன் குப்பை சேகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடற்கரையை தவிர 4 ஏரிகளிலும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மாணவர்கள் பலர் இதில் பங்கேற்கிறார்கள்.