பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2014


இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சென்னை தூதரகம் முற்றுகை

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன.


இலங்கை முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதகரத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் அமைப்பு அறிவித்து இருந்தது.
இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் பொது செயலாளர் கோவை ரகமத்துல்லா தலைமையில், பெண்கள் உள்பட 500–க்கும் அதிகமானோர் லயோலா கல்லூரி அருகே திரண்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படத்தை செருப்பு, துடைப்பத்தால் அடித்தனர்.
அங்கிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.தொடர்ந்து அங்கிருந்து செல்லமுயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். 500–க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.