பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2014

சுற்றுலா பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் 
 இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

 
மூன்று மாதகாலத்துக்கு என விநியோகிக்கப்படும் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மென்ரக வாகனங்களுக்காக சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
 
இதேவேளை மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.