பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2014

தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடையாம் ; அரசாங்கம் 
 இலங்கையில்  இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

 
 
சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பொதுபல சேனாவைத் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
 
 
மேலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது.
 
இந்த நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும் ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
 
எனினும் பொதுபல சேனாவிற்குப் பதில் வேறொரு சிங்கள அமைப்பைத் தடை செய்வது குறித்தே அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தி வருவதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பான அறிவித்தல் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாகவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.