பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2014

அமைச்சர் சம்பத் வீடு முற்றுகை :
பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி அருகே அமைச்சர் சம்பத் வீட்டை  அதிமுக ஊராட்சி துணைத்தலைவர் தலைமையில் கிராம மக்கள் இன்று முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், அதிமுகவைச் சேர்ந்தவர்.   ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.  இவர் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.  
இந்நிலையில், வெங்கடேசன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இன்று காலை பண்ருட்டி அடுத்த சென்னை சாலையில் திருமலை நகரில் உள்ள அமைச்சர் சம்பத் வீட்டை முற்றுகையிட்டனர்.  இதனால்  பரபரப்பு ஏற்பட்டது.
வெங்கடேசன் மீது தொடர்ந்து வழக்கு போடப்படுவதை கண்டித்தும், புதுப்பேட்டை போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் சம்பத்திடம் வலியுறுத்தினர்.  மதியம் 1 மணியளவில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.  இதையடுத்து அவர்கள் முற்றுகையை கைவிட்டனர்.