பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014

அரசின் அனுமதியுடனேயே முஸ்லிம் மீது தாக்குதல்; அளுத்கமவில் வைத்து ரணில் விக்கிரசிங்க குற்றச்சாட்டு 
அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் பேருவளை போன்ற இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது அரச அனுசரணையுடனேயே நடத்தப்பட்டது என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக் கூறினார்.
 
பாதிக்கப்பட்ட அப்பகுதிகளுக்கு நேற்றுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிகாரிகொட மஸ்ஜி துல் ரஹ்மான் பள்ளிவாசலில் முஸ்லிம்களைச் சந்தித்து உரையாற்றியபோது மேற் கண்டவாறு கூறினார். 
 
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
இந்தப் பகுதியில் முஸ்லிம்க ளும், சிங்களவர்களும் ஒற்று மையாக வாழ்ந்துவந்தனர். ஆனால், அரசு தனது அரசியல் நலனுக்காக இந்த ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் முஸ்லிம்கள் மீது குண்டர்களை ஏவித்தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்கு தலை நடத்தியவர்கள் துரோகிகள்.
 
பெளத்தர்கள் மிலேச்சனத்தன மானவர்கள் என்றொரு கெட்ட பெயரை துரோகிகள் இத்தாக்கு தல் மூலம் பெளத்த மக்களுக் குப் பெற்றுக்கொடுத்துள்ளனர். சர்வதேசத்தில் நாட்டின் பெயரைக் கெடுத்துவிட்டனர். இத் தாக்குதல் தொடர்பில் நான் மிகுந்த கவலையைத் தெரிவிக்கிறேன். 
 
ஏதும் பிரச்சினை என்றால் அது பேசித்தான் தீர்க்கப்பட வேண்டும். ஆனால், இங்கு அந்த முறை கடைப்பிடிக்கப் படவில்லை. அளுத்கம கூட்டத் தில் ஞானசார தேரர் ஆற்றிய உரையே இத்தாக்குதலுக்குக் காரணம். அது பயங்கரவாத உரை.
 
முஸ்லிம்கள் மிகவும் அச்சத் துடன்தான் இப்போது நோன் பை வரவேற்றிருக்கின்றனர். இது கவலையான நிலைமை. இந்த நிலைமை இனி மாற்றப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நட்டஈடு வழங்கப்பட வேண்டும். என்றார்.