பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014




வருமான வரி மோசடி வழக்கு: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை
வருமான வரி மோசடி வழக்கில் ஜெயலலிதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நேரடியாக
ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஜூலை 24ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. 
அதன் அடிப்படையில் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்து பலமுறை ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்றும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது கோர்ட். ஆனால் இன்றும் இருவரும் ஆஜராகவில்லை. 
நீதிபதி தட்சணாமூர்த்தி முன்பு, ஜெயலலிதா சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வருமான வரித்துறையிடம் மனு அளித்தோம். அது இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இவ்வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜூலை 24ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி கூறினார்.