பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2014


ஜெ. மனு தள்ளுபடி: சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவு



சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கு வழக்கம்போல பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருப்பதை சுட்டிக் காட்டினர். இதனையடுத்து ஜெயலலிதா மனு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்தவுடன் முடிவு செய்வோம் என்று நீதிபதி டிகுன்கா கூறியிருந்தார்.
ஜெயலலிதா மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டதை அறிந்ததும், சொத்து குவிப்பு வழக்கில் வரும் 19ஆம் தேதி இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.