பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2014

அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா 
news
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
 
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான  மரடோனா அர்ஜென்டினாவின் ஆட்டம் தொடர்பில் கூறியதாவது:
 
மெஸ்சியன் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் தொடர்ந்து கோல்களை அடிப்பது மிகவும் அவசியமாகும். இதே போல அகீரோ, கோன் சாலா ஆகியோரும் நன்றாக ஆட வேண்டும்.
 
ஆனால் பின்களத்தில் அர்ஜென்டினா பலவீனமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் எதர் கொள்ளும் போட்டியில் வெற்றி பெற முடியும். இதனை நன்குணர்ந்து வீரர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என மரடோனா தெரிவ்ததார்.