பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2014

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க மீண்டும் வலியுறுத்துகிறது பிரித்தானியா 
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா
அழைப்பு விடுத்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்திஇ போரில் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை வழங்குவதற்காக இந்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளான இலங்கை மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ஜனநாயகம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சிநல்லாட்சி வளமாக அபிவிருத்தி பாலின சமத்துவம் ஆகிய பொதுநலவாயத்தின் மதிப்புகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஐ.நா விசேட பிரதிநிதி ஏஞ்சலீனா ஜோலி ஆகியோரின் இணைத்தலைமையில் கட்நத வாரம் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்திற்கு ஒப்புதலை பெற இலங்கையை பிரித்தானியா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்பதுடன் இலங்கையில் இடம்பெற்ற மோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பில் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையும் ரன்கின் நினைவு கூர்ந்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடந்த வகுப்புவாத வன்முறைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் நாம் எமது சகாவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து எமது கவலையை வெளிப்படுத்தினோம்.

சமூகங்களை பாதுகாக்க தெளிவான வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்படுவார்கள் என நம்புவதாகவும் ரன்கின் கூறியுள்ளார்.

இந்த விளைவுகளுக்கான அரசாங்கத்தின் உத்தரவாதங்களை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கையின் நண்பன் என்ற வகையில் நாங்கள் இதனை கூறுகின்றோம்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கை முழுமையான ஸ்திரத்தன்மையையும் முழு திறனையும் அடைய முடியும் என நாம் நம்புகிறோம்.

பல பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் முன்னோக்கிய நகர்வுகளில் ஈடுபட பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவுகளை வழங்கும் எனவும் பிரித்தானிய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானிய மகாராணியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
id=221353145320784163#sthash.n0BLK3fF.dpuf