பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2014


த.ம.மு.க மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு: புதுக்கோட்டையில் பரபரப்பு
   ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக இருப்பவர் முல்லைவேந்தன். 


இவர் வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டம் பனயப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் இரு தரப்பு நிலப் பிரச்சணை சம்மந்தமாக பேசிக் கொண்டிருந்த போது, அந்த நேரத்தில் வந்த ஒரு கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களுடன் வந்து முல்லை வேந்தனை தலை, கை, வயிறு மற்றும் பல இடங்களிலும் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்ட னர்.


   வெட்டுப்பட்டு ரத்தத்தில் கிடந்த முல்லைவேந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
   இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.