பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ; சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.


நேற்று நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  உலகின் எட்டாம் நிலை  வீராங்கனையான  மரியா ஷரபோவா மற்றும் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்திலுள்ள  ருமேனியாவின் சிமோனா ஹாலப்  (Simona Halep ) ஆகியோர் மோதினர்.

மூன்று மணித்தியாலங்கள் இரண்டு நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் ஷரபோவா 6,4,6,7 மற்றும் 6,4 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டார்.

இது ஷரபோவா வெற்றிக் கொண்ட 5ஆவது  கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பதும் குறிப்படத்தக்கது.

இதேவேளை, பிரெஞ்ச் பகிரங்க  டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபாயல்  நடால் மற்றும்  செர்பியாவின் நொவக் ஜோகோவிச் ஆகியோர் இன்று மோதவுள்ளனர்.