பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2014


முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்க அரசாங்க இணையத்தளங்கள் முடக்கம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளங்களை முடக்கும் செயற்பாடு ஒன்றில் குழு ஒன்று ஈடுபட்டுள்ளது.
ஒப்பரேசன் சிறிலங்கா என்ற அந்த குழு இது தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
இந்த குழு பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை தற்போது முடக்கியுள்ளது.
அத்துடன் மேலும் சில அரசாங்க இணையத்தளங்களையும் முடக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.