பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014

குழந்தை பெற்று 20 நாட்கள்தான்… 12 பேரால் பலாத்காரம்
உத்திரபிரதேசத்தில் குழந்தை பெற்று 20 நாட்களே ஆன பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்திரபிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஷாஹித் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர்.
பின்னர் ஷாஹித்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு போய் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
ஷாஹித்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.