பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014

பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

பாடலாசிரியர் வைரமுத்து உடல்நிலை சரியில்லாமல் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கோவையில் கடந்த சில தினங்களுக்கு நடந்த கவிஞர்கள் திருவிழா என்ற நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், கோவை வந்த வைரமுத்துவுக்கு லேசான முதுகுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வைரமுத்து நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
மேலும், மருத்துவக்குழுவினர் வைரமுத்துவுக்கு பரிசோதனை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.