பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2014


ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகிதபூர்வ சந்திப்பு

ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரெலோ வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எரிக் சொல்கெய்ம் உடன் சிநேகித பூர்வ சந்திப்பு ஒன்றை நேற்று 7ம் திகதி சுவிஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
ரெலோவின் ஐரோப்பிய மாநாட்டுக்கு வருகை தந்த ரெலோ தலைவர் திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), வடக்கு மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு ஜனா கருணாகரன் மற்றும் ரெலோ லண்டன் அமைப்பாளர் சாம் ஆகியோர் இந்த சந்திப்பில் திரு எரிக் சொல்கெய்மை சந்தித்து இலங்கையின் இன்றைய நடப்பு விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற இச் சந்திப்பில், இலங்கை அரசினால் தொடர்ந்தும் நெருக்கடிக்குள்ளாகி வரும் வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளும் இலங்கை அரசு சிங்கள் மீனவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தும் தமிழ் மீனவர்களின் தொழிலில் பாதிப்புக்களை எற்படுத்துவது பற்றியும்,
இலங்கையில் தமிழர் பிர்ச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் ஏற்படும் சிக்கலுக்கு சர்வதேசமும் மூன்றாம் தரப்பும் இன்றி எம்மால் தீர்வினை பெறமுடியாது என்பதையும்,
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னமும் அதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் பற்றியும்,
இராணுவம் தமிழர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்களில் நிலை கொள்வதினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது பற்றியும் திரு. எரிக் சொல்கெய்ம் உடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்போது திரு எரிக் சொல்கெய்ம் இலஙகையில் தமிழர்கள், முஸ்லீம்கள் ஒன்றிணைந்து செயல்ப்பட வேண்டும் என்றும்,  இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சிநேகபூர்வமான சந்திப்பிற்கான ஏற்பாடுகள் லண்டன் ரெலோ அமைப்பாளர்களால் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பையடுத்து ரெலோ பாராளுமன்ற, வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு சுவிஸில் முன்னாள் ரெலோ உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடிய பின்னர், ஜேர்மனியில் ரெலோவின் உள்ளக மாநாடு நடாத்தவுள்ளனர்.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHTcLbhw1.html#sthash.AEcn3lwD.dpuf