பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2014


ஐ .நா உயர் பதவிக்கு இலங்கை பெண் அதிகாரி தெரிவு
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரவதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளரான சம்மித்ரி ரம்புக்வெல்ல ஐ.நாவின் 5வது குழுவின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நாவின் 69 வது மாநாட்டின் கூட்டத்திற்கான 5வது குழுவின் உப தலைவராக அவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சம்மித்ரி ரம்புக்வெல்ல, ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5ஆம் குழுவில் அங்கம் வகித்து வருகிறார்.
ஐ.நாவின் 69 வது மாநாட்டிற்கான நிர்வாக பணிகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆலோசனை பணிகள் என்பவற்றை இந்த 5வது குழுவே மேற்கொண்டு வருகிறது.
1958 ஆம் ஆண்டு இலங்கை அதிகாரி ஒருவர் இந்த பதவியை வகித்து வந்ததுடன் அதற்கு பின்னர், முதல் முறையாக சம்மித்ரி ரம்புக்வெல்ல தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.