பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014


அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள படையணி: பின்னணியில் அமெரிக்கா
அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் சம்பளத்தில் பேஸ்புக் சமூக வலையத்தள படையணி ஒன்று ஏற்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதியான சமூகம் மற்றும் ஜனநாயக முன்னேற்றத்திற்காக சமூக வலையத்தளங்களை பயன்படுத்தும் விசேட பயிற்சி திட்டத்திற்காக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 5 ஆயிரம் இலங்கை இளைஞர்கள், யுவதிகளை இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது.
அவர்களுக்கான சம்பளத்தை அமெரிக்கத் தூதரகமே வழங்க உள்ளது.
அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த இளைஞர், யுவதிகளை இதில் இணைத்து அடுத்து நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதே இதன் குறுகிய கால திட்டமாகும்.
இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது போனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டது போல அரசியல் புரட்சியை மேற்கொள்வது இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கம் கூறப்படுகிறது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.