பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014

என் கனவை நிறைவேற்றுங்கள்: கதறி அழுத நெய்மர் 
உலகக்கிண்ணத் தொடரில் தான் இல்லாமல் பிரேசில் அணி கிண்ணம் வெல்ல முடியும் என நெய்மர் கூறியுள்ளார்.
கொலம்பியா அணிக்கெதிரான போட்டியில் கொலம்பிய வீரர் ஜூவான் காமிலோ ஜுனிகா, நெய்மர் மீது கடுமையாக மோதியதில், ஜுனிகாவின் கால், நெய்மரின் முதுகில் பட்டு கடும் காயத்தையும், எலும்பு முறிவையும் ஏற்படுத்தி விட்டது.
இதனால் மைதானத்தில் விழுந்த நெய்மர் வலியில் கதறினார். அவர் தொடர்ந்து போட்டிகளில் ஆட முடியாது என்று கூறி விட்டதால் பிரேசில் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அடிபட்ட பிறகு கண்ணீர் மல்க ரசிகர்களுக்காக வெளியிட்ட காணொளியில் அவர் கூறியதாவது, இந்த நிலைமையானது மிக கடினமானது. எனது எண்ணங்களை வார்த்தையாக சொல்ல முடியவில்லை.
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் விரைவில் திரும்பி வருவேன். எனக்காக ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனது பயணம் இன்னும் முடிந்து விடவில்லை. எனது சாம்பியன் கனவை எனது அணி வீரர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள்.
மற்றொரு கனவு என்னவென்றால் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது தான் ஆனால் அது இப்போது நடக்காது.
கண்டிப்பாக எனது வீரர்கள் கிண்ணத்தை வெல்வார்கள். அதை பிரேசில் மக்கள் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.