பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014


தடுத்து வைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா கோரிக்கை
அவுஸ்திரேலியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது
.
இந்தியாவில், புதுச்சேரிக்கு அருகே உள்ள கீழ்ப்புத்துப்பட்டு என்ற கிராமத்திலும், பிற சில அகதிகள் முகாம்களில் இருந்தும் சுமார் 153 இலங்கை அகதிகள் படகில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்று நடுக்கடலில் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று புதுடெல்லிக்கு விஜயம் செய்து, அகதிகள் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஜூன் மாதம் 157 அகதிகளை ஏற்றி சென்ற படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தை இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
இந்தியாவிற்குள் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக யாரும் குடிபுகுவதையோ, அல்லது இந்தியாவிலிருந்து யாரும் சட்டவிரோதமாக குடியகல்வதையோ இந்திய அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தவிர, இந்தப் பிரச்சினை சட்டரீதியாகவும், மனிதாபிமான ரீதியிலும் கையாளப்பட வேண்டும் என்றும், சிறுவர்கள் உட்பட எவருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது ஸ்கொட் மொரிசனிடம் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளது.