பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014


பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் பிரதியமைச்சர்

பாலியல் வல்லுறவுச் சம்பவம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கனிய எண்ணெய் வள அபிவிருத்தி பிரதியமைச்சர் சரண குணவர்தன பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தங்கும் விடுதியில் அண்மையில் நடந்த பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்று சபுகஸ்கந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் பொலிஸாருக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது.