பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014

சர்வதேச மயமாக்காது பிரச்சினைக்குத் தீர்வு; ஆலோசனை கூறுகின்றது இந்திய அரசு 
இலங்கை அரசுக்கும், தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதனை சர்வதேச மயப்படுத்தப்படுவதற்குப்
பதிலாக, இலங்கை அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையிலேயே சிறந்த முறையில் பேசி, இணைந்து தீர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார் இந்திய மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளரும், பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்ரி சாரி.
 
இந்திய வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது, நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதில் தலையீடு செய்யக் கூடாது. 
 
மாநில அரசுகள், அதில் தலையிடக் கூடாது என்று நாங்கள் பலமாக உணர்கிறோம். அவர்கள் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடாது. என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
"தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. ஆனால், மோடி அரசு எந்தவொரு பிராந்தியக் கட்சியிலும் தங்கியிருக்காமல் பலமாக உள்ளது. 
 
இலங்கை அரசுக்கும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்குமான பிரச்சினை உள்நாட்டு விவகாரமாகும். இந்தப் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதற்குப் பதிலாக, இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையிலேயே சிறந்த முறையில் தீர்க்க முடியும். பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட முடியும். 
 
ஒன்று அல்லது இரண்டு நாடுகள் இணைந்து கொண்டு தனிநாடு ஒன்றுக்கு எதிராக, தண்டனைத் தீர்மானங்களைக் கொண்டு வரும் காலம் மாறிவிட்டது. தீர்மானங்கள் மற்றும் தடைகளை விதிக்கும் யோசனைகளால் பயனில்லை. அவை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியதை, இரண்டாவது அணுகுண்டுப் பரிசோதனைக்குப் பின்னர் இந்தியா, ஈரான் மற்றும் மியான்மரில் பார்த்திருக்கிறோம். 
 
அதேவேளை தமிழர்களின் கவலைகளுக்குப் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
- See