பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014

சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம் 
 பயங்கரவாத நடவடிக்கைகளினால் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெறும் வகையில் புதிய சட்ட மூலமொன்று
நேற்று நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
இதில் ஆட்சியுரிமை  (விஷேட ஏற்பாடுகள்) எனப்படும் இந்த சட்ட மூலம் தொடர்பான விவாதங்கள் விரைவில்  இடம்பெற்று அது சட்டமாக்கப்படும்.
 
சாதாரண சட்டத்தின் படி குறிப்பிட்ட காலமாக ஒருவர் தனது சொத்துக்களை பயன்படுத்தாது விடுவாராயின்  அவர் தமது சொத்துக்களை இழந்துவிடுவார்.
 
ஆனால் இந்த புதிய சட்டத்தின மூலம் இவர்கள் தாம் இல்லாத காலத்தில் தமது காணிகளை பிடித்து வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.