பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2014

விசா இன்றி பயணம்: மோசமான நாடுகள் வரிசையில் இலங்கை 
 விசா இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய முடியாத மிக மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 
பிரித்தானியாவின் ஹென்லி அன்ட் வீசாவரையறை சுட்டி நிறுவனத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன்படி ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, எரித்திரியா, பலத்தீனம், சூடான், நேபாளம், லெபனான், கொசோவோ,  சிரியா, தென் சூடான், லிபியா,  மியன்மார்,  ஈரான்,  வடகொரியா, அங்கொலா மற்றும் டிஜிபோட்டி உள்ளிட்ட நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
 
குறித்த நாடுகள் தமது நாட்டு பிரஜைகள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் உரிமையை முடக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பின்லாந்து, சுவீடன், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
 
குறித்த நாடுகள் வெளிநாட்டுக்க பயணம் செய்யும் தமது பிரஜைகளுக்கு உரிய சுதந்திரத்தை இந்த நாடுகள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிற