பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2014

news
 யாழ்.முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த நாட்களில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 3 எலும்புக்கூடுகளும் 2 எலும்பு எச்சங்களும் மீட்கப்பட்டதுடன் வெடிபொருட்களும்  இதர பொருட்களும் மீட்கப்பட்டன. 
 
இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு மேற்கொள்வதற்கு பற்றைக்காடுகள் தடையாகவிருந்தமையினாலேயே அவற்றினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
அப்பகுதியில் மிதிவெடிகள் அதிகம் இருப்பதினால் மிதிவெடி அகற்றும் பணியாளர்களின் மூலம் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு