பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூலை, 2014

கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 
புசல்லாவ, பலாகொல்ல பிரதேசத்தில் வசித்த சானக பெரேரா என்பவரை 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஐவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 
 
கடந்த பல வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 
 
இந்த நிலையில் ஏனைய சந்தேகநபர்கள் குற்றவாளிகளான இனங்காணப்பட்ட நிலையில் இன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கு 2001ஆம் ஆண்டிலிருந்து கண்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.