பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூலை, 2014

காகங்களின் இருப்பிடமாக மாறிவரும் யாழ்.பேருந்து நிலையம் 
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
 
எனினும் மக்களின் இந்த அசௌகரியங்களை போக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தை சுத்தமாக்கி காகக் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.
 
இதேவேளை பேருந்து நிலையத்தை நோக்கி வரும் காகங்கள் மக்களின் மேல் எச்சங்கள் போடுவதுடன் நிலையத்தையும் அசுத்தமாக்குகின்றன.
 
எனவே மக்களின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.