பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014



வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை
 


கவிஞர் வைரமுத்து முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.  இந்நிலையில் அவர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த ஒருவாரமாக
பங்கேற்று வந்தார்.  நேற்று முதுகு வலி அதிகமாகவே, கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றனர்.  அதன்படி இன்று காலையில் வைரமுத்துவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.  20 நிமிடங்கள் இந்த சிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சைக்கு பின்னர் வைரமுத்து நலமுடன் இருப்பதாக, அவரை அருகில் இருந்து கவனித்து வரும் மகன்களூம், மருமகள்களும் தெரிவித்துள்ளனர்