பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2014


மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய
 போதிய ஆதாரங்கள் உள்ளது : அட்டர்னி ஜெனரல்
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி மாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய
போதிய ஆதாரங்கள் இருக்கிறது என மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கும்படி அதன் தலைவர் சிவசங்கரன் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.  இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் டில் நீதிபதி எச்.எல். டட்டு தலைமையிலான அமர்வின் முன்பாக சி.பி.ஐ. கடந்த மே மாதம் 2ம் தேதி விளக்கம் அளித்தது. அப்போது, ‘‘ஏர்செல்–மேக்சிஸ் பேர வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது. இதை அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதியின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம்’’ என கூறப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 
இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்தியமந்திரி மாறன் மற்றும் அவரது சகோதரர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருக்கிறது என சி.பி.ஐ.யிடம், தற்போதைய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்தகி தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.