பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2014


திண்டுக்கல் லியோனி திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலின் போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத்தெருவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி கலந்து
கொண்டு நாகை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயனை ஆதரித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து அங்கு அனுமதி பெறாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாகவும், அதில் திண்டுக்கல் லியோனி பேசியதாகவும் திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது ஆலிவலம் போலீசில் புகார் செய்தார். 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு சப்–இன்ஸ்பெக்டர் கல்யாணம் ஆகியோர் அன்பரசன், திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சிவா வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 25–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.