பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2014


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., வழக்கறிஞர் குமார் இறுதிவாதத்தை நிறைவு செய்கிறார்
கடந்த ஜூன் 19ம் தேதி தனது இறுதி வாதத்தை தொடங்கிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், இன்றைய தினம் 23 வது நாளாக தனது வாதத்தை தொடர்கிறார். 
ஜூலை 21ம் தேதியான இன்றைய தினம் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்கிறேன் என்று கடந்த வாரம் குமார் கூறியிருந்தார். 


இதையடுத்து இன்று அவர் இறுதி வாதத்தை முடிப்பார் என்று தெரிகிறது. 


1991-96 இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக  66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கியது.  இன்றைய தினம் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இறுதி வாதத்தை முடித்தவுடன்,  அதற்கடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் 20-20-20 தினங்களில் தங்கள் இறுதி வாதத்தை வைத்தாலும் 60 நாளில் வழக்கு விசாரணை முடிந்துவிடும், என்றும் அதன்பிறகு தீர்ப்பு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.