பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2014

காஸா தாக்குதல்: கதறி கதறி அழுத ஐ.நா.அதிகாரி 
காஸா விவகாரம் குறித்து பேசுகையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதுள்ளார்.
இஸ்ரேல்– காஸாமுனை இடையிலான போர் 25 வது நாளை எட்டியுள்ளது. காஸா முனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.
நேற்று வடக்கு காஸா முனையில் ஜெபல்யா என்ற இடத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் பீரங்கித்தாக்குதலையும், வான்வழி தாக்குதலையும் நடத்தியது.
காஸாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 1360 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலைப் பொருத்தமட்டில் 53 வீரர்களும், பொதுமக்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பினருக்கு இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கன்னேஸ் கதறி அழுதார்.
என் உணர்வுகளை, காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரும் துயரங்களுடன் ஒப்பிட முடியாது. இஸ்ரேல் படையின் அறிவிப்பை அடுத்துதான் மக்கள் முகாம்களுக்கு வருகின்றனர் என்று கூறியுள்ள அவர் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களின்றி அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.