பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2014

ஜெ., மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி
சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு
பதவிப்பிரமாணத்தை மீறும் வகையில் நடந்துகொள்ளும் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி
உச்சநீதிமன்றத்தில் சென்னையைச்சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராக தம்மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று  அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவரே மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் ஆளுநருக்கு ஒரு மனு வழங்கியிருந்ததாகவும், அந்த மனு மீது ஆளுநர் அலுவலகம் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்,  அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுதாம் அம்மனுவில் கூறியு ள்ளார்.
  குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு அனுப்பியிருப்பதாக தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது