பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2014

கனடாவின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை அரசாங்கம் 
 கனேடிய அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்க வேண்டாம் என கனடா கோரிக்கை விடுத்துள்ளது.
 
 
எனினும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என கனேடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராய் கோரியிருந்தார்.
 
இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவதுடன் ஜனநாயக நெறிமுறைகள் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இதேவேளை இலங்கைக்கான கனேடிய தூதரகத்திற்கு அரச சார்பற்ற நிறுவனங்களே தகவல்களை வழங்கி வருவதாகவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள