பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2014


மேல் மாகாண முதலமைச்சர் கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளார்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கிரிக்கட் மட்டையினால் நபர் ஒருவரைத் தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் குறித்த நபரிடம் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க நேற்று மாலை சில நபர்களுடன் வந்து கிரிக்கட் மட்டையில் தம்மைத் தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
மெல்வத்த நாவல கொஸ்வத்தை என்னும் முகவரியைச் சேர்ந்த 69 வயதான எ.எம். பியசேன என்பவரே இது தொடர்பிலான முறைப்பாட்டை செய்துள்ளார்.
காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.