பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014

முறிந்த நெய்மரின் முதுகெலும்பு: மெஸ்ஸி உருக்கமான ஆறுதல் 
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு காயம் அடைந்ததை தொடர்ந்து அவர் எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த காரணங்களால் பிரேசில் அணிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. நெய்மரை, கொலம்பிய வீரர் முரட்டுத்தனமாக மடக்கியதால் கீழே விழுந்த அவருக்கு முதுகுப் பகுதியில் உள்ள எலும்பு முறிந்தது.
அதனால் அவர் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து நடக்கும் அரையிறுதியில்(யூலை 8) நெய்மர் இல்லாமல் பிரேசில் எப்படி வலிமையான ஜேர்மனியை சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெய்மர் அடிபட்டதை தொடர்ந்து அவரின் பார்சிலோனா அணி நண்பரும் சக வீரருமான அர்ஜென்டினா அணியின் அணித்தலைவர் மெஸ்ஸி தனது பேஸ்புக்கில் இருவரும் பார்சிலோனா அணியின் சீருடையில் சேர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, “நெய்மர், நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன் எனது நண்பரே” என்று பதிவிட்டுள்ளார்.